Home கலை உலகம் தாமரையுடன் வாழ விரும்பவில்லை – கணவர் தியாகு பேட்டி! 

தாமரையுடன் வாழ விரும்பவில்லை – கணவர் தியாகு பேட்டி! 

656
0
SHARE
Ad

thiyagu thamaraiசென்னை, பிப்ரவரி 28 –  தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞர்களுள் ஒருவரான தாமரை தனது கணவரை காணவில்லை என்றும் அவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படியும் கூறி நேற்று திடீர் உண்ணாவிரதம் அறிவித்தார்.

இந்நிலையில், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் வாழ விரும்பாததால், தனிமையில் இருந்து வருவதாக தாமரையின் கணவர் தியாகு கூறியுள்ளார்.

இது தொடர்பாக விகடன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளியவில்லை. நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும். பத்திரிகைகளுக்கு தாமரை அளித்த கடித்தைப் பாத்தேன்.”

#TamilSchoolmychoice

“இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய பிரிவுதான் நிரந்த தீர்வா இருக்கும் என முடிவு செய்தேன். அதனால் நான் அவரிடமிருந்து பிரிந்து வேளச்சேரியில் வசித்து வருகிறேன்.”

“தொடர்ந்து 5 வருடங்களாக எங்களுக்குள் ஒத்து வரவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு என்று யோசிக்கிற பெண் அவரில்லை. பின்னர் எதற்காக இந்த போராட்டம் என தெரியவில்லை.”

“நான் தாமரையை பிரிந்தாலும், எனது மகனுடன் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். இனி தாமரை என்னை அழைத்தாலும் அவருடன் சேர்ந்து வாழும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அவரின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதனால் தாமரைக்கு விவாகரத்து வழங்கவும் தயாராக இருக்குறேன்.

இதனை வைத்து நான் வேறு திருமணத்திற்கு தயாராகிறேன் என்று எண்ண வேண்டாம். சமுதாய களப்பணியில் ஆர்வமுள்ள நான் அதனை தொடர்ந்து செய்வேன். அதே நேரத்துல என் மகனிடம் மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.