Home உலகம் நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைக்க வேண்டும் – பர்வேஸ் முஷரப்!

நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைக்க வேண்டும் – பர்வேஸ் முஷரப்!

1124
0
SHARE
Ad

nawazஇஸ்லாமாபாத், பிப்ரவரி 28 –  நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானை வழிநடத்த முடியாமல் திணறுகிறார். அதனால் அவரின் ஆட்சியை உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானில் நல்லாட்சி நடைபெற வேண்டும். அந்த ஆட்சியை யார் வழங்குகிறார்கள்? என்பது முக்கியம் அல்ல”.

“நல்லாட்சி உருவாகியே தீர வேண்டும் என்பது எனது உள்ளப்பூர்மான ஆசை. மூன்றாவது அரசியல் சக்தி அமைய வேண்டும் என்பது இந்த நேரத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.”

#TamilSchoolmychoice

“நாட்டின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருக்குமேயானால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம். நம் நாட்டை வழிநடத்த முடியாமல் நவாஸ் ஷெரிப் திணறுகிறார். அவரின் இயலாமையை கருத்தில் கொண்டு அவரது ஆட்சியை கலைக்க  நீதிமன்றம் உத்தரவு போடவேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஆதிக்கம் பற்றி முஷரப் கூறுகையில், “ஆப்கன் அரசு தலிபான்களுடன் கூட்டாட்சி வைக்க வேண்டும். நீண்ட கால போராட்டத்திற்கு அது ஒன்றே தீர்வாகும். இதன் மூலம் அங்கு இந்தியாவின் தலையீட்டைக் தவிர்க்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.