Home One Line P2 மற்றுமொரு ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது!

மற்றுமொரு ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது!

851
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றொரு பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு நாட்டின் ஊழல் தடுப்புத் துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சவுத்ரி சர்க்கரை ஆலைகள் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தானின் தேசிய பொறுப்புணர்வு பணியகம் (என்ஏபி) கைது ஆணையை பிறப்பித்திருந்தது

அல்அஜீசியா மில்ஸ் ஊழல் வழக்கில் ஷெரீப் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் அவரது மகள் மரியாம் நவாஸ் மற்றும் மருமகன் யூசோப் அப்பாஸ் ஆகியோரை என்ஏபி ஏற்கனவே கைது செய்துள்ளது.

அவர்கள் இருவரும் அக்டோபர் 23 வரை நீதித்துறை தடுப்புக் காவலில் இருப்பர்.

சர்க்கரை ஆலைகளின் பங்குகளை விற்பனை மற்றும் வாங்குதல் ஆகியவற்றின் கீழ் பண மோசடியில் ஈடுபட்டதாக மரியாம்  குற்றம் சாட்டப்பட்டார்.

2008-ஆம் ஆண்டில் அவர் 12 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளைக் கொண்ட ஆலைகளின் மிகப்பெரிய பங்குதாரராகிவிட்டார் என்றும், அவரது சொத்துக்கள் அவரது வருமானத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் கூறப்பட்டது.