Home நாடு வரவு செலவுத் திட்டம் 2020 : தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ஒதுக்கீடு – கேரித்...

வரவு செலவுத் திட்டம் 2020 : தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ஒதுக்கீடு – கேரித் தீவு மேம்பாடு காணும்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது.

அதே போன்று சீனமொழிப் பள்ளிகள், இஸ்லாமியப் பள்ளிகள் போன்ற மற்ற வகைப் பள்ளிகளுக்கும் தலா 50 மில்லியன் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்கள் பின்வருமாறு:

  • கேரித் தீவு மீதான மேம்பாடு குறித்து அரசாங்கம் தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. இந்தத் தீவை மேம்படுத்தி அதன் மூலம் கிள்ளான் துறைமுகத்தை கடல்சார் மையமாகவும், கப்பல்வழி போக்குவரத்துக்கான மையமாகவும் உருமாற்ற திட்டங்கள் வகுக்கப்படும்.
  • மத்திய அரசாங்கத்தின் மொத்த வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பு 297.2 பில்லியன் ரிங்கிட்டாகும்.
  • இதில் பெரும்பகுதி – அதாவது 45.1 விழுக்காடு வருமான வரி மூலம் பெறப்படும். வரிவிதிப்பு அல்லாத வருமானம் 18.4 விழுக்காடு. கடன்கள் மூலம் 17.7 விழுக்காடு வருமானம் பெறப்படும். மறைமுக வரிகள் மூலம் 15.9 விழுக்காடு மற்றும் இதர நேரடி வரி விதிப்புகளின் மூலம் 2.9 விழுக்காடு வருமானம் பெறப்படும்.
  • முதியவர்களின் சமூக, பொருளாதார உதவிக்காக 575 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.
#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)