Home நாடு வரவு செலவுத் திட்டம் 2020 : மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்

வரவு செலவுத் திட்டம் 2020 : மித்ரா மூலம் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்

817
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2020 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் துறை அமைச்சின் கீழ், அமைச்சர் வேதமூர்த்தியின் மேற்பார்வையில் செயல்படும் மித்ரா எனப்படும் பிரிவுக்கு இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது எனவும் லிம் குவான் எங் அறிவித்திருக்கிறார்.

நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்கள் பின்வருமாறு:

  • மின்னியல் (டிஜிடல்) வரி எதிர்வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும். மின்னியல் சேவைகள் வழங்கும் நெட்பிலிக்ஸ், ஸ்போடிபை (Spotify), கூகுள் மூலம் வழங்கப்படும் மின்னியல் விளம்பரங்கள், மின்னியல் மென்பொருள் மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகள் மின்னியல் வரி விதிப்புக்கு ஆளாகும்.
  • பெண்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் முயற்சியாக 30 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமலிருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு சலுகைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 33 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
  • இவ்வாறு மீண்டும் வேலைக்குத் திரும்பும் பெண்களுக்கு மாதம் 500 ரிங்கிட் ஊக்கத் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதே இரண்டு ஆண்டு காலகட்டத்தில் இத்தகைய வேலைகளை வழங்கும் முதலாளிகளுக்கு மாதம் 300 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)