Home நாடு வரவு செலவுத் திட்டம் 2020 : இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ஒதுக்கீடு

வரவு செலவுத் திட்டம் 2020 : இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ஒதுக்கீடு

983
0
SHARE
Ad
வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சிலிருந்து புறப்படும் குவான் எங்

கோலாலம்பூர் – (மாலை 4.45 மணி) நிதியமைச்சர் லிம் குவான் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து உரையாற்றி வருகிறார்.

அதில் பல்வேறு முக்கிய நிதி ஒதுக்கீடுகளை அறிவித்து வருகிறார்.

1எம்டிபி ஊழல் விவகாரங்கள் இல்லாமல் இருந்தால் நாடு 2020 தொலைநோக்குத் திட்டத்தை இலக்கின்படி அடைந்திருக்கும் என தனது உரையின் தொடக்கத்தில் குவான் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து பேசிய அவர் ஜிஎஸ்டி எனப்படும் வரிவிதிப்பு மீண்டும் கொண்டுவரப்படமாட்டாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

தொடர்ந்து அவர் அறிவித்த பல்வேறு நிதி ஒதுக்கீடுகளில் இந்திய வணிகர்களுக்கு தெக்குன் திட்டம் மூலம் 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் அடங்கும்.

அவரது உரையின் மற்ற சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • உலக சந்தைக்குள் நுழைய வாய்ப்புள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் ரிங்கிட் வீதம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உதவி நிதி வழங்கப்படும்.
  • மிக அதிகமான நிதி ஒதுக்கீட்டை பெறும் 3 அமைச்சுகள் கல்வி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகும்.
  • கல்வி அமைச்சு 64.1 பில்லியன் ரிங்கிட்; நிதி அமைச்சு 37.8 பில்லியன்; சுகாதார அமைச்சு 30.6 பில்லியன் நிதி ஒதுக்கீடுகளைப் பெறும்.

(மேலும் விவரங்கள் தொடரும்)