Home One Line P2 ஜின் பெங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 5 திபெத்தியர்கள் கைது

ஜின் பெங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 5 திபெத்தியர்கள் கைது

850
0
SHARE
Ad

சென்னை – சீன அதிபர் ஜி ஜின் பெங்கின் வருகையை முன்னிட்டு வரலாறு காணாத பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கியிருக்கும் சென்னையில், சீன அதிபர் தங்கவிருக்கும் தங்கும் விடுதிக்கு வெளியே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 திபெத்தியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

வழக்கமாக சீன அதிபர் அல்லது பிரதமர் இந்தியாவுக்கு வருகை தரும்போது, திபெத்திய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். சீனா, திபெத் நாட்டை ஆக்கிரமித்ததற்கு எதிராக இன்னும் நாடு கடந்த நிலையில் ஏராளமான திபெத்திய மக்கள் போராடி வருகின்றனர்.

நாடுகடந்த திபெத் அரசாங்கமும் இயங்கி வருகிறது. திபெத்திய மக்களின் ஆன்மீக குருவான தலாய் லாமாவும் இந்தியாவில்தான் அடைக்கலமாகித் தங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதியிலும், மகாலிபுரம் பகுதிகளிலும் பல திபெத்தியர்களும், தைவானியர்களும் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இன்று சீன அதிபர் சென்னைக்கு வரவிருக்கும் நிலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்த இந்த 5 திபெத்தியர்களும் கைது செய்யப்பட்டு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டனர்.