பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு முகேனுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை காலையில் முகேன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக நூறுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். சிலர் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பின்பு, முகேன் அங்கிருந்து அவருடைய படங்களால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
மலேசிய வந்தடைந்தவுடன், முகேன் தமது முதல் பயணமாக பத்து மலை கோயிலுக்கு வருகைப் புரிந்திருந்தார். அங்கும் மக்கள் அவரைச் சூழ்ந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, தமிழக ஊடகங்களிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் முகேன் பலமுறை தாம் தமிழ் நாட்டில் வாய்ப்புகளை தேடி வருவதாகவும், ஒரு சில திட்டங்கள் மற்றும் பணிகளை மலேசியாவில் முடித்துக் கொண்டு, மீண்டும் தமிழகம் வருவார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.