Home One Line P1 விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்

விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்

839
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஜசெகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவரான லிம் கிட் சியாங் கூறினார்.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) (சோஸ்மா) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவித்து, அவர்கள தங்களை தற்காத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் கைருடின் அமான் ராசாலி காவல் துறையின் செயலை வரவேற்று, பினாங்கு துணை முதல்வர் பி.இராசாமியையும் கைது செய்யமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று ஓர் அறிக்கையில் இது குறித்துப் பேசிய கிட் சியாங், பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன் காவல் துறையை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

பொதுவாக, காவல் துறை பொறுப்புடன், வெளிப்படையாக எவ்வாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்க வேண்டும். நம்பிக்கைக் கூட்டணியின் நிருவாகத்தின் உறுதிப்பாட்டுடன், இந்த அரசாங்கத்தின் கீழ் காவல் துறையினர் எவ்வாறு தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள் என்பதை விளக்க காவல் துறை இந்தக் குழுவின் முன் விளக்க வேண்டும்.”

நேற்று வியாழக்கிழமை புக்கிட் அமான் காவல் துறையின் நடவடிக்கையில் இரண்டு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் விழுதலைப் புலிகளை ஊக்குவித்தல், ஆதரித்தல், பொருட்களை வைத்திருத்தல் மற்றும் நிதி விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.