Home One Line P2 சீன அதிபரைச் சந்திக்க சென்னை வந்தடைந்தார் மோடி

சீன அதிபரைச் சந்திக்க சென்னை வந்தடைந்தார் மோடி

738
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 2.30 நிலவரம்) இந்திய அளவிலும், ஏன் உலக அளவிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படும் சீன அதிபர் ஜி ஜின்பெங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பின் முதல் கட்டமாக பிற்பகல் 2.00 (மலேசிய நேரம்) மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் மோடி.

விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் பாஜகவுடனான கூட்டணித் தலைவர்கள் பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் சற்று நேரம் இருந்த மோடி அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை என்ற இடத்தை வந்தடைந்தார். இங்கிருக்கும் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் இறங்கிய அவரை பிரமுகர்கள் வரவேற்றனர். இங்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஜெயகுமார் ஆகியோரும் மோடியை வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மோடி சென்றுள்ளார்.

சீன அதிபர் இதற்குப் பின்னர் சென்னை வந்தடைவார். மோடி வருகை குறித்த சில படக்காட்சிகள்: