சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பெங் இன்று வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்தார்.
இரு உலகத் தலைவர்களின் சந்திப்பு இன்று மாலை கடலோர நகரமான மாமல்லப்புரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு பிரதமர் மோடி சீன அதிபருக்கு இரவு உணவு விருந்தளிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் வுஹானில் சந்தித்த ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து நாளை சனிக்கிழமை அவர்கள் காலை நேரடி சந்திப்பிற்கு தயாராக உள்ளார்கள்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதம், பயிற்சி, நிதி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு வேறு ஏதேனும் ஆதரவு உள்ளிட்டவை விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வணிகம், பாதுகாப்பு மற்றும் எல்லை பிரச்சனைகளும் இந்த சந்திப்பின் போது பேசப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா– சீனா எல்லைக்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் கவனித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.