Home உலகம் ஓரினச்சேர்க்கையாளர் மாடியிலிருந்து வீசிக் கொலை – ஐஎஸ்ஐஎஸ் பயங்கரம்!

ஓரினச்சேர்க்கையாளர் மாடியிலிருந்து வீசிக் கொலை – ஐஎஸ்ஐஎஸ் பயங்கரம்!

511
0
SHARE
Ad

is3ரக்கா, மார்ச் 1 – சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆளுமையின் கீழ் இருக்கும் ரக்கா பகுதியில், ஓரினச் சேர்க்கையாளர் ஒருவருக்கு நீதிமன்றத்தின் முன் கொடூரமான மரண தண்டனை நிறைவேற்றப்படும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

isis1

is2ரக்கா பகுதியில் நீதிமன்றத்தின் முன் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீவிரவாதிகளையோ, பிணைக்கைதிகளையோ மக்கள் காணவில்லை. அந்த நேரத்தில் அனைவரும் நீதிமன்றத்தின் மிக உயரமான மேற்கூரையை நோட்டமிடுகின்றனர். கண், கை, கால்கள் அனைத்தும் கருப்பு துணியால் கட்டப்பட்ட நிலையில், ஒருவர் நீதிமன்றத்தின் மேற்கூரையில் இருந்து தள்ளிவிடப்படுகிறார். கீழே விழுந்த அவரை பார்வையாளர்கள் கல்லால் அடிக்கின்றனர். தரையில் விழுந்த சில நொடிகளிலேயே அவர் இறந்து விடுகிறார்.

#TamilSchoolmychoice

is4குழந்தைகளின் கண் முன்னே இந்த கொடூர தண்டனைக்கு ஆளானவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் மாடியிலிருந்து வேறொருவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.