Home இந்தியா இந்திய பட்ஜெட் 2015: 150 நாடுகளுக்கு சிறப்பு விசா சலுகை!  

இந்திய பட்ஜெட் 2015: 150 நாடுகளுக்கு சிறப்பு விசா சலுகை!  

566
0
SHARE
Ad

arun  Jaitleyபுது டெல்லி, மார்ச் 2 – இந்திய பட்ஜெட் 2015-ல் பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில், ‘விசா ஆன் அரைவல்’ (Visa on Arrival) திட்டத்தை 150 நாடுகளுக்கு செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சனிக்கிழமை மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கூறியதாவது:-

“இந்தியாவில் கடந்த ஆண்டு விஒஎ (VoA) திட்டம் சுமார் 43 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து வருகிறது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த நடைமுறையை 150 நாடுகளுக்கு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“இதன் மூலம் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், இந்திய வருகையின் போது விசா பெற்றுக்கொண்டால் போதுமானது” என்று அவர் கூறியுள்ளார்.