Home நாடு ‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015′ – மார்ச் 6 வரை கட்டுரை சமர்ப்பிக்கலாம்!

‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015′ – மார்ச் 6 வரை கட்டுரை சமர்ப்பிக்கலாம்!

717
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 2 – எதிர்வரும் மார்ச் 27- 28-ம் தேதிகளில், தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் லாஸ்யா கலாலயத்தில் “காப்பியங்களில் அறிவியல் கோட்பாடும், சமுதாயச் சிந்தனை வெளிப்பாடு” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள  ‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015′-ல் கட்டுரை படைக்க விரும்புபவர்களுக்கு, மார்ச் 6-ம் தேதி வரை கட்டுரைகளை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

unnamed

இதற்கு முன்பு, மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், படைப்பாளர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே, மாநாட்டின் முழுக் கட்டுரையும் 5 -6 பக்கத்திற்குள் தயார் செய்து, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஏற்பாடு குழுவினருக்கு tfatrust.tinakaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.