Home Featured நாடு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘நாத அமிர்தம்’ இசைக் கச்சேரி!

உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘நாத அமிர்தம்’ இசைக் கச்சேரி!

957
0
SHARE
Ad

Natha amirthamகோலாலம்பூர் – உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவில் கடந்த 2015 ஆண்டில் தமிழ் ஆர்வலர்களால் நிறுவப்பட்டது.

கடந்த ஓராண்டு காலக்கட்டத்தில் இந்நிறுவனம் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டையும், மணிமேகலை வசனக் கவிதை வடிவில் புத்தக வெளியீட்டையும் வெற்றிக் கரமாக நடத்தி மக்களிடையே தமிழ் இலக்கியத்தை உலக முழுக்க பரப்பி வருகின்றது.

அவ்வகையில், இன்று ஏப்ரல் 23-ம் தேதி சிரம்பானில் ‘நாத அமிர்தம்’ எனும் தமிழிசை கச்சேரியினை (Auditorium Kompleks JKKN Negeri Sembilan, Jalan Sungai Ujong, 70200 Seremban) என்ற முகவரியில், மாலை 7.30 மணிக்கு “நிருத்யா தாரா” செல்வி குருவாயூர் கிருத்த்திகா@கார்த்தியாயினி (“மதுர நாட்டிய மாமணி” திருமதி குருவாயூர் உஷா துரையின் மகள்) அவர்கள் அரங்கேற்றுகிறார்.

#TamilSchoolmychoice

Nathaஇந்நிகழ்ச்சி சிரம்பானில் இயங்கும் தினகரன் நுண்கலை கலைக்கழகமும் , கோலாலும்பூரில் இயங்கும் லாஸ்யா கலாலயத்தின் ஆதரவோடு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தமிழ் ஆர்வாலர்களுக்கும், தமிழிசை ஆர்வாலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் எண்களை அழைத்து வருகையினை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

(திரு.பால.தனேசு – 0143279982, திருமதி குருவாயூர் உஷா துரை – 0123237434)