Home Featured உலகம் பனாமா விவகாரம்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய தயார் – நவாஸ் செரீப்!

பனாமா விவகாரம்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய தயார் – நவாஸ் செரீப்!

1051
0
SHARE
Ad

Nawaz-Sheriffகராச்சி – பனாமா விவகாரத்தில், நவாஸ் ஷெரீப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் என் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நான் பதவி விலக தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் பெயர்களும் இடம் பெற்றிருந்தது, பாகிஸ்தானில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதை நவாஸ் ஷெரீப் மறுத்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன்பேரில் நீதி விசாரணை நடத்தப்படும் என நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த குற்றசாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப், வரி ஏய்ப்பு செய்ததாக என் மீது குற்றசாட்டுபவர்களுக்கு சவால் விடுகிறேன், குற்றசாட்டுக்கான ஆதாரத்தை காட்டுங்கள். என் மீதான நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நான் பதவி விலக தயார் என்று அவர் கூறியுள்ளார்.