பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஷெரீப்புக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஏழு வருடக் காலத்திற்கு சிறைத் தண்டனை விதித்தது. அறிவித்த சொத்துகளுக்கு அப்பாற்பட்ட முதலீடுகள் செய்ததற்குக் காரணமாக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.
ஷெரீப், கடந்த ஜூலையில் வேறு ஊழல் வழக்குகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மேல்முறையீடு செய்த பிறகு, செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை இடைக்காலத் தடையுத்தரவு வழங்கி நிறுத்தி வைத்தது.
அவர் சிறையில் இருந்தபோது அவருடைய கட்சியானது, ஜூலை மாதம் நடைபெற்றப் பொதுத் தேர்தலில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குத் தொடர்பில், நீதிமன்றம் ஷெரிப்புக்கு 25 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது.