Home Featured நாடு மருத்துவமனை உணவில் கரப்பான்பூச்சி – பாதிக்கப்பட்டவருக்கு 67,000 ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமனை உணவில் கரப்பான்பூச்சி – பாதிக்கப்பட்டவருக்கு 67,000 ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

719
0
SHARE
Ad

justiceகோலாலம்பூர் – உணவில் பூச்சி விழுந்து அதைத் தவறுதலாக உண்டுவிட்டால், மருத்துவமனைக்குச் செல்லலாம். ஆனால் மருத்துவமனை அளிக்கும் உணவிலேயே பூச்சி இருந்தால் என்ன தான் செய்வது? அப்படித் தான் இருக்கிறது இந்தச் சம்பவம்.

கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த தாபுங் ஹாஜி சேவை மைய அதிகாரி ஒருவருக்கு, அங்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சியின் தலை இருந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் உண்டு விட்டார். சுவை மாறவே அப்போது தான் அதை கவனித்திருக்கிறார்.

இச்சம்பவத்தால், வான் ஹைல்மே மாஹ்ராவி (வயது 38) என்ற அந்த நபருக்கு வயிற்று வலி, வாந்தி, கடும் காய்ச்சல் உள்ளிட்டவைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்நபருக்கு கேபிஜே சிலாங்கூர் சிறப்பு மருத்துவனையின் (KPJ Selangor Specialist Hospital) உரிமையாளரான சிலாங்கூர் சிறப்பு மருத்துவமனை (Selangor Specialist Hospital Sdn Bhd) 67,000 ரிங்கிட் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.