Home Featured இந்தியா மறைந்த சக்திமான் குதிரைக்கு விராட் கோலி இரங்கல்!

மறைந்த சக்திமான் குதிரைக்கு விராட் கோலி இரங்கல்!

753
0
SHARE
Ad

horesபுதுடெல்லி – உத்திரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ வால் தாக்கப்பட்டு, உயிரிழந்த குதிரை சக்திமானூக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் காங்கிரஸுக்கு எதிராக, பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் குதிரைப்படை சென்றது.

அப்போது கனேஷ் ஜோஷி உருட்டுக்கட்டையால் தாக்கியதில், சக்திமான் என்ற குதிரையின் கால் உடைந்தது. அதன்பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன் ஒரு கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த குதிரை நேற்று முன்தினம் திடீரென இறந்து போனது. இது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அதன் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘ ஒரு பாவமும் அறியாத அப்பாவி குதிரை சக்திமானின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.