டேராடூன் – உத்தரகண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வால் தாக்கப்பட்ட சக்திமான் போலீஸ் குதிரை நேற்று உயிரிழந்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, காவல் துறையைச் சேர்ந்த சக்திமான் குதிரையை பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தாக்கி காலை உடைத்ததாகப் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோஷி பின்னர் ஜாமீனில் விடுதலையானார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்பட்டது.
இத்தாக்குதலில் குதிரை சக்திமானின் இடது பின்னங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டது. குதிரை எழுந்து நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குதிரையின் கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் குதிரைக்கான செயற்கை காலை தானமாக வழங்கினார். இந்நிலையில், நேற்று குதிரை சக்திமான் இறந்ததாக அதை பராமரித்து வந்த போலீஸார் கூறினர்.