Home Featured இந்தியா குதிரையை தாக்கிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை!

குதிரையை தாக்கிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை!

638
0
SHARE
Ad

Ganesh-Joshiடேராடூன் – குதிரை மீது தாக்குதல் நடத்தியதாக சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர், ரூ.25 ஆயிரம் செலுத்தி பிணையில் விடுதலையாகியுள்ளார். உத்தராகண்ட் மாநில காவல் துறையில் சக்திமான் என்கிற வெள்ளைக் குதிரை பணியாற்றி வருகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளில் இந்தக் குதிரை அணிவகுப்பில் பங்கேற்கும். டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்  கணேஷ் ஜோஷி, சக்திமான் என்ற குதிரையை தாக்கினார். இதில் குதிரையின் இடது கால் முறிந்தது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மாற்றுக் கால் பொருத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குதிரையைத் தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர்.

#TamilSchoolmychoice

இதையடுத்து கணேஷ் ஜோஷியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், பிணை (ஜாமின்) வழங்கக் கோரி பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கணேஷ் ஜோஜிக்கு இன்று நீதிமன்றத்தில் பிணை (ஜாமின்) கிடைத்துள்ளது. ரூ.25 ஆயிரம் சொந்த பிணைத் தொகை செலுத்தி அவர் ஜாமின் பெற்றுள்ளார்.