Home Featured தமிழ் நாடு மூச்சுத்திணறல் காரணமாக சோ. ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத்திணறல் காரணமாக சோ. ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

675
0
SHARE
Ad

cho-ramasamy,சென்னை – மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் சோ.ராமசாமி.

வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல் நல பாதிப்புக்குள்ளாகிவருகிறார். சமீபத்தில், மூச்சு திணறல் காரணமாக, மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று மீண்டார் சோ. அப்போது, மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், மீண்டும் சோ. ராமசாமி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.