இந்நிலையில், இந்த ஆண்டு, தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என ரஜினி தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் நடிகரும், பத்திரிக்கையாளருமான சோ ராமாசாமி ஆகிய இரு முக்கியப் பிரமுகர்கள் மறைந்ததையடுத்து, தமிழகமே சோகமடைந்துள்ள நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது சரியல்ல என்றும், ரசிகர்கள் போஸ்டர் மற்றும் பதாகைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சமயத்தில் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments