Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி!

ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி!

623
0
SHARE
Ad

sasikala

சென்னை – தமிழக முதல்வர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் பொதுமக்கள் விடிய, விடிய வருகை தந்து, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பலர் அந்த நினைவிடத்தில் அமர்ந்து மொட்டை போட்டுக் கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு, அவரது தோழி சசிகலா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சில அமைச்சர்கள் வருகை தந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சசிகலா குடும்பத்தினரும் அவரோடு வருகை தந்திருந்தனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜெயலலிதாவுக்காக அனுதாபக் கூட்டங்களும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.