Home இந்தியா உலக பிரபல விளையாட்டாளர்கள் பட்டியல்: விராட் கோலி 7-வது இடம்!

உலக பிரபல விளையாட்டாளர்கள் பட்டியல்: விராட் கோலி 7-வது இடம்!

1115
0
SHARE
Ad

புது டில்லி: இந்த ஆண்டிற்கான பிரபல விளையாட்டாளர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விரட் கோலி முதல் பத்து இடத்தில் இடம் பெற்றுள்ளார். இஎஸ்பிஎன் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டின் பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

போர்த்துகல் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார்இதனிடையே, முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் எட்டு இந்திய கிரிக்கெட் வீரர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜெண்டினாவின் காற்பந்து வீரர் லயோனல் மெஸ்சி மூன்றாவது இடத்தில் இடம் பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

தோனி 13-வது இடத்தில் இடம் பெற்றுள்ள வேளையில்,  யுவராஜ் சிங் (18-வது இடம்), சுரேஷ் ரெய்னா (22), அஷ்வின் (42), ரோகித் சர்மா (46), ஹர்பஜன் சிங் (74), தவான் (94) ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  

இந்தப் பட்டியலில் மூன்று பெண் விளையாட்டாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள். டென்னிஸ் வீராங்கனைகளான, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (17), ரஷ்யாவின் மரியா ஷரபோவா (37), இந்தியாவின் சானியா மிர்சா (93) ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்