Home Featured தமிழ் நாடு விஜயகாந்துக்கு எதிராக போராட்டம்: 330 ரஜினி ரசிகர்கள் கைது!

விஜயகாந்துக்கு எதிராக போராட்டம்: 330 ரஜினி ரசிகர்கள் கைது!

662
0
SHARE
Ad

rajiniதிருப்பூர் – நடிகர் ரஜினிகாந்த் பற்றி விமர்சித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து ரஜினி ரசிகர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 330-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ரஜினி பின்வாங்கியதை போல் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று கூறினார் விஜயகாந்த்.

மேலும் ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ரஜினிகாந்த் பற்றி விமர்சித்து விஜயகாந்த் பேசியதை கண்டிக்கும் வகையிலும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூர், காங்கேயம், அவினாசி, தாராபுரம் வெள்ளகோவில், பல்லடம் ஆகிய 8 இடங்களில் கருப்புகொடி ஏந்தி ரஜினிகாந்த் ரசிகர் மற்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விஜயகாந்தை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். காங்கேயம் பகுதியில் அனுமதி மீறி கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 330-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்