இஸ்லாமாபாத் – சிறையில் இருந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியாம் இருவருக்குமான சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 20) இரத்து செய்து உத்தரவிட்டது.
நவாசுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டணையில் இதுவரையில் 3 மாதங்களை மட்டுமே அவர் சிறையில் கழித்திருக்கிறார்.
ராவல் பிண்டி சிறையில் இருந்து வரும் நவாஸ் ஷெரிப் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுக்கு வருகை ஒன்றை மேற்கொண்டு துபாய் சென்று சேர்ந்திருக்கிறார்.