Home நாடு திரெங்கானு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடு!

திரெங்கானு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடு!

1096
0
SHARE
Ad

pulauredang (1)கோலாலம்பூர், மார்ச் 2 – திரங்கானு மாநிலத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் வரையறுக்கப்பட்ட ஆடை தான் அணிந்து வர வேண்டும் என அம்மாநில அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளில் குறிப்பாக பெண்கள் உடல் அங்கங்கள் தெரியும் படியான ஆடை அணிவதைத் தடுக்கவே இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அம்மாநிலத்தில் பெண்கள் எப்படிப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும் என்று இன்னும் விதிமுறைகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இருபாலருக்கும் அந்த விதிமுறைகள் பொருந்தும் படியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், பெண்களின் ஆடை அணிவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அம்மாநில அரசாங்க இணையத்தளம் தெகானுக்தாவில் செய்தி வெளியிடப்பட்டிருந்து பின்னர் அது நீக்கப்பட்டது.

இதனிடையே, விரைவில் இந்த புதிய ஆடை கட்டுப்பாடுகள் குறித்து மலேசியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா முகவர்களுக்கு  அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், ஆண்களும், பெண்களும் முற்றிலும் இஸ்லாமிய பாரம்பரிய உடை அணியத் தேவையில்லை என்றும், ஆனால் நாகரீகமான ஆடை அணிய வேண்டும் என்று சில தகவல்கள் தெரிவித்ததாக ‘தி ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியான திரெங்கானு மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் மலாய்க்காரர்கள் என்பதோடு, திரெங்கானு மாநிலத்தில் ரெண்டாங், பெர்ஹெந்தியான் என இரண்டு அழகான தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.