Home நாடு எஸ்டிபிஎம் 2014 தேர்வு முடிவுகள்: சிஜிபிஏ பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்வு!

எஸ்டிபிஎம் 2014 தேர்வு முடிவுகள்: சிஜிபிஏ பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்வு!

638
0
SHARE
Ad

2014-stpm-resultகோலாலம்பூர், மார்ச் 2 – 2014-ம் ஆண்டிற்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் கடந்த 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிஜிபிஏ தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தேர்வில், சிஜிபிஏ 4.00 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 0.91% ஆக அதிகரித்துள்ளது என்றும், 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதம் 2.57-ல் இருந்து 2.62-ஆக உயர்ந்துள்ளது என்றும் மலேசிய தேர்வுக் குழு ஆணையத்தின் தலைமை பேராசிரியர் டாக்டர் டத்தோ முகமட் நோ டாலிமின் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மாணவராக பகாங் மாநிலத்தைச் சேர்ந்த கபிலன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice