Home நாடு எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

673
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தற்போது நடைபெற்று வரும் எஸ்.பி.எம் தேர்வுகளில் வரலாறு தேர்வுத் தாளை மோசமாக விமர்சித்த இரு பதின்ம வயது இளைஞர்கள் அதைக் காணொலியாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

அதன் தொடர்பில் அவர்கள் இருவரும் காவல் துறையினரால் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 25) கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையை சில வழக்கறிஞர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

அவர்களைக் கைது செய்தது வரம்பு மீறிய செயல் எனக் கண்டனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

அவர்கள் இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பட்லீனா சிடேக் தெரிவித்தார்.