Home நாடு மஇகா விவகாரங்களில் தலையிட வேண்டாம் – ஐசெகவுக்கு சிவராஜா எச்சரிக்கை

மஇகா விவகாரங்களில் தலையிட வேண்டாம் – ஐசெகவுக்கு சிவராஜா எச்சரிக்கை

635
0
SHARE
Ad

130430-1-n30buntongகோலாலம்பூர், மார்ச் 3 – மஇகா விவகாரங்களில் தலையிடுவதை ஐசெக கட்சியிலுள்ள இந்தியத் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா எச்சரித்துள்ளார்.

ஐசெக-வின் துணைப் பொதுச் செயலர் பி.ராமசாமி விடுக்கும் அறிக்கைகள் அனைத்தும் மஇகாவில் இரு தரப்பினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் எண்ணத்துடனேயே வெளியிடப்படுகிறது என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“சில சமயங்களில் அவர் விடுக்கும் அறிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. பதில் அளிப்பதற்குரிய தகுதியும் அந்த அறிக்கைகளுக்கு இல்லை. மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை குறிவைத்து ராமசாமி அறிக்கைகள் விடுக்கிறார். ஆனால் அவரது அறிக்கைகள் தற்போதைய தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலை மையப்படுத்தியே இருந்திருக்க வேண்டும்,” என்று சிவராஜா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சாமிவேலு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட காலமாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பி.ராமசாமி போன்றவர்கள் இந்திய சமுதாயத்துக்காக சாமிவேலு தான் இன்னும் முடிவுகளை எடுப்பதாக கருதிக் கொண்டுள்ளனர் என்றார்.

“சாமிவேலுவை தாக்குவதன் மூலம் பலன் அடைந்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ள ராமசாமி, அந்த தாக்குதலை மேற்கொண்டு தொடர்வதன் மூலம் இந்திய சமுதாயத்தின் ஆதரவைப் பெறலாம் என நம்பிக் கொண்டிருக்கிறார்.

“உங்கள் வாயைத் திறக்கும் முன் சிறிதளவேணும் அரசியலை தெரிந்து கொள்ளுங்கள்… அறிவுப்பூர்வமாக பேசுங்கள். மஇகா விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்” என்று சிவராஜா மேலும் தெரிவித்துள்ளார்.