Home நாடு மஇகாவிலிருந்து விலகிய புனிதன் பெரிக்காத்தான் நேஷனலில்! சிவராஜ் இணையும் கட்சி எது?

மஇகாவிலிருந்து விலகிய புனிதன் பெரிக்காத்தான் நேஷனலில்! சிவராஜ் இணையும் கட்சி எது?

541
0
SHARE
Ad
டத்தோ சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர் : மஇகாவில் இருந்து சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் விலகும் படலம் தொடங்கியுள்ளது. முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் சில நாட்களுக்கு முன்னர் மஇகாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மஇகா சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவரான புனிதன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், புனிதன் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி ஒன்றில் இணையப் போவதாகத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து செனட்டராக இருக்கும் சிவராஜ் அடுத்து எந்தக் கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. மித்ரா அமைப்பிலும் சிவராஜ் செயல் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

Comments