Home இந்தியா செந்தில் பாலாஜி : மீட்டுக் கொள்ளப்பட்ட ஆளுநர் ரவி கடிதம் – நீதிமன்றத்தில் வழக்கு

செந்தில் பாலாஜி : மீட்டுக் கொள்ளப்பட்ட ஆளுநர் ரவி கடிதம் – நீதிமன்றத்தில் வழக்கு

306
0
SHARE
Ad

சென்னை : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அமைச்சர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது – அவரை நீக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். பின்னர் அந்தக் கடிதத்தை மீட்டுக் கொண்டார்.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

செந்தில் பாலாஜியின் விவகாரம் தற்போது ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான மோதலாக உருமாறியுள்ளது.