Home இந்தியா செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

447
0
SHARE
Ad
செந்தில் பாலாஜி

சென்னை : இருதய நாள அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிர்வரும் ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காணொலி மூலம் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டப்பட்ட செந்தில் பாலாஜி உடலில் வலி இருப்பதாக கூறியுள்ளார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

#TamilSchoolmychoice