Home கலை உலகம் ஆஸ்ட்ரோ: ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளருடன் – ஒரு சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ: ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ பங்கேற்பாளருடன் – ஒரு சிறப்பு நேர்காணல்

423
0
SHARE
Ad

ஜோக்கி (அத்தியாயம் 5), பங்கேற்பாளர்:

  1. உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுக.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சமூக ஊடகங்களில் பிரபலமானச் சிக்கல்களைப் பற்றி வேடிக்கையாகப் பேசிக் காணொலிகளை உருவாக்கி டிக்டாக்கில் பதிவேற்றத் தொடங்கினேன். அவ்வாறே, சமூக ஊடகங்களில் எனது பயணம் தொடங்கியது. தொடர்ச்சியானப் பதிவுகள் மூலம் டிக்டாக்கில் என்னைப் பின்தொடர்பவர்களை என்னால் அதிகரிக்க முடிந்தது. பின்னர், யூடியூப்பில் இதே போன்ற உள்ளடக்கத்தைப் பதிவேற்ற முடிவு செய்தேன், மீண்டும் தொடர்ச்சியானப் பதிவுகளினால் என்னைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 ஆயிரத்தைத் தாண்டியது. இதனால், வெள்ளி யூடியூப் தகடு எனக்கு வழங்கப்பட்டது. டிக்டாக்கில் 312.5 ஆயிரம் பின்தொடர்பவர்கள், யூடியூப்பில் 104 ஆயிரம் பின்தொடர்பவர்கள் மற்றும் இன்ஸ்ட்டாகிராமில் 227 ஆயிரம் பின்தொடர்பவர்கள் உட்பட அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் 643 ஆயிரத்திற்க்கும் அதிகமானப் பின்தொடர்பவர்களை ஒரு சமூக ஊடகப் பிரபலமாக என்னால் குவிக்க முடிந்தது.

  1. பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் எவ்வாறு இருந்தது?

‘பனாஸ் டோக் வித் விகடகவி’யில் நான் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டாம் முறையாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.  கடுமையான விவாதத்தை நான் எதிர்பார்க்காததால் இது எனது எதிர்பார்ப்பிலிருந்து சற்று வேறுபட்டது. விவாதம் என் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு இருந்ததால், நான் உண்மையிலேயே இரசித்தேன். எனது அனுபவத்தை 2 வார்த்தைகளில் சுருக்கமாகச் சொன்னால், அது ‘வேற லெவல்’.

  1. கலைத்துறையில் உங்களின் முன்மாதிரி யார்?
#TamilSchoolmychoice

எனது முன்மாதிரி என் அப்பாதான். கலைத்துறையில் எனது பயணத்தின் தொடக்கத்திலிருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். மேலும், இந்தத் துறையில் எனக்கு பல முன்மாதிரிகள் இல்லை.

  1. உங்களின் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.

வாழ்கையில் எவ்வளவுத் தடைகள் வந்தாலும், முன்னேறிப் போனால் மட்டுமே வெற்றியடைய முடியும்.