Home கலை உலகம் ‘ஜீயும் நீயும்’ ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்பு

‘ஜீயும் நீயும்’ ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்பு

434
0
SHARE
Ad

உள்ளூர் தமிழ் கற்பனைக் காதல் நகைச்சுவைத் தொடர் ‘ஜீயும் நீயும்’ ஜூலை 3 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

எதிர்வரும் ஜூலை 3, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் ஜீயும் நீயும் எனும் உள்ளூர் தமிழ் கற்பனைக் காதல் நகைச்சுவைத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ விண்மீன்), மகேஸ்வரன் பாலகிருஷ்ணன் கூறுகையில், “உள்ளூர் உள்ளடக்கத்தைப் புதிய ஆஸ்ட்ரோ மூலம் மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டிருப்பதால், பலதரப்பட்ட மற்றும் தனித்துவமானக் கதைக்களங்கள் மற்றும் வகைகளைக் கொண்ட உயர்தரப் புதிய உள்ளூர் தமிழ் தொடர்களைப் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோ விண்மீனில் எங்கள் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். ‘பசங்க’ தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, முதல் ஒளிபரப்புக் காணும் ‘ஜீயும் நீயும்’ தொடர் மற்றொரு விண்மீன் பிரத்தியேகத் தொடராகும். இத்தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிப்பார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புகழ்பெற்ற உள்ளூர் திறமையான எஸ். பாலச்சந்திரன் இயக்கிய ஜீயும் நீயும் தொடரில், ஜீ குட்டி, கவிதா, ஷேபி, விகடகவி மகேன், ரூபினி கிருஷ்ணன் மற்றும் பல உள்ளூர் திறமையாளர்கள் நடித்துள்ளனர். ஒரு மந்திர மோதிரத்தைக் கண்டு பிடிக்கும் குள்ளத்தன்மைக் கொண்ட ஆர்வமுள்ள இளம் நடிகரான ஜீயை இந்த 16-அத்தியாய நகைச்சுவைத் தொடர் சித்திரிக்கிறது.

ஜீயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் நீனா எனும் ஒரு ஜீனி அந்த மந்திர மோதிரத்திலிருந்து தோன்றுகிறாள். சிறந்த நடிகையான மீரா ஷெட்டிக்கு ஈடாக முன்னணி நடிகராக வேண்டும் என்ற தனது கனவை அடையத் தீவிர மாற்றம் உதவும் என்ற நம்பிக்கையில் அம்மாற்றத்தை ஜீ விரும்பினார். இதற்கிடையில், மந்திர மோதிரத்தின் உண்மையான உரிமையாளரின் ஆவி, அம்மோதிரத்தைக் கண்டுப்பிடிக்க பேராசிரியர் சீனா என்ற மனிதரை ஆட்கொண்டது. அதே நேரத்தில், ஒரு தீயச் சக்தியானத் தருகாவால் நீனா வேட்டையாடப்படுகிறாள். இந்த எதிரெதிர் சக்திகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கானப் போரில் மோதுவதால், பதற்றங்கள் அதிகரிக்கின்றன. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலானப் போராட்டமே கதையின் மையக்கரு – பேராசிரியர் சீனாவா அல்லது தருகாவா? – யார் தனது திட்டத்தில் வெற்றி பெறுவார்?

ஜீயும் நீயும் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.