Home Slider சீனா அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக ரயில் : 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கிறது

சீனா அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக ரயில் : 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கிறது

975
0
SHARE
Ad

பெய்ஜிங்,டிச.24 – 2300 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் அதிவேக புதிய ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த ரயில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தென்பகுதியில் உள்ள வர்த்தக நகரான குவாங்சூ வரை இயக்கப்படுகிறது. அதற்காக விசேஷ அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக நீளமான இந்த ரயில் பாதையில் நேற்று முன்தினம் இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் இது இயக்கப்பட்டது. ஆனால் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவில் கடந்த ஆண்டு புல்லட் ரயில் விபத்துக்குள்ளானது. அதில் 40 பேர் பலியாகினர். அதனால் அதிவேக ரயில்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த ரயிலின் பாதுகாப்பான பயணத்துக்கு சீனா ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

வழக்கமாக பெய்ஜிங்- குவாங்சூ நகரங்களுக்கு இடையேயான ரெயில் பயணம் 20 மணி நேரமாகும். தற்போது இந்த அதிவேக ரயிலின் மூலம் பயணம் 8 மணி நேரமாக குறைகிறது.

இந்த ரயில் பயணம் வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்குள் பயணம் செய்ய இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.