Home Slider மலேசியாவில் இந்து பொருளாதார மாநாடு

மலேசியாவில் இந்து பொருளாதார மாநாடு

1018
0
SHARE
Ad

datosahaகோலாலம்பூர், டிசம்பர் 25 – தென்கிழக்கு, கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கான உலக இந்து பொருளாதார மாநாடு எதிர்வரும் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது.

தலைநகரின் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் விடுதியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த மாநாட்டின் தலைவராக தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகியான டத்தோ பி.சகாதேவன் (படம்) செயல்படுவார்.

முதலாவது இந்துஉலக இந்து பொருளாதார மாநாடு கடந்த  ஜூன் 2012இல் ஹாங்காங் நகரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு மலேசியாவில் ஜனவரி 2013இல் நடைபெறுகின்றது. மலேசியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் பல பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பல்வேறு தலைப்புக்களில் இந்த மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்படுவதோடு, கலந்துரையாடல்களும் நடைபெறும். உலகின் பெரும்பகுதிகளில் பரவியுள்ள இந்து வர்த்தகர்களை ஒருங்கிணைக்கும்  தளமாக இந்த மாநாடு அமையும்.

இந்த மாநாடு குறித்த மேல்விவரங்கள் பெற கீழ்க்காணும் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளலாம்:

டாக்டர் ரூபா சுவாமிநாதன் – 016 -3064119ந 03- 77708668

ஸ்ரீ ஆனந்தன் – 012 – 3930333