Home உலகம் நைஜீரியாவில் துப்பாக்கி சூடு : 6 பேர் பலி

நைஜீரியாவில் துப்பாக்கி சூடு : 6 பேர் பலி

1024
0
SHARE
Ad

நைஜீரியா,டிச.26 –  நைஜீரியா கிறிஸ்துவ தேவலாயத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் போதகர் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள்.

நைஜீரியா நாட்டில் உள்ள யோபே மாநிலத்தை சேர்ந்த பேரி கிராமத்தில், நேற்றிரவு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், பிராத்தனை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென்று துப்பாக்கியால் சுட்டனர்.

என்ன நடக்கின்றது என்பதை புரிந்துக் கொள்வதற்கு முன்னதாகவே, தேவாலயத்தின் போதகர் உள்பட 6 பேர் குண்டடிப்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். மேலும், தேவாலயத்தையும் தீ வைத்து எரித்து அந்த மர்மகும்பல், தப்பித் தலைமறைவாகி விட்டதாக பேரி கிராமவாசி ஒருவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சுவிசேஷ சபைகளை குறிவைத்து ஒரு கும்பல், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.