Home கலை உலகம் தலைப்புக்காக தடுமாறும் விஜய்

தலைப்புக்காக தடுமாறும் விஜய்

1046
0
SHARE
Ad

சென்னை,டிச.27 -இயக்குநர் விஜய் ஆக இருக்கட்டும், நடிகர் விஜய் ஆக இருக்கட்டும் இருவரும் தங்களது முந்தையப் படங்களில் தலைப்பு பிரச்சனையால் படாதபாடு பட்டுவிட்டார்கள். தற்போது இவர்கள் இணையும் புதிய படத்திலும் இதே தலைப்பு பிரச்சனை தலை தூக்கியிருக்கிறது.

இயக்குநர் விஜய் மற்றும் நடிகர் விஜய் இணையும் புதிய படத்திற்கு முதலில் தலைவன் என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதை வேறு ஒரு படத்துக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் அந்த தலைப்புக்கு பதில் தங்கமகன் என்ற தலைப்பை இயக்குநர் விஜய் தேர்ந்தெடுத்தார். ரஜினியின் பட தலைப்பு என்பதால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே அந்த முயற்சியையும் கைவிட்ட இயக்குநர் விஜய், எந்த பழைய படத்தின் தலைப்பை பயன்படுத்தலாம் என்று யோசித்த நேரத்தில், நடிகர் விஜய், எந்த பழைய படத்தின் தலைப்பும் வேண்டாம். கதைக்கு ஏற்ற ஒரு புதிய தலைப்பை நீங்களே தேர்வு செய்துவிடுங்கள் என்று இயக்குநர் விஜயிடம் கூறிவிட்டாராம்.

கதை யோசிக்க கூட கஷ்டப்படாத இயக்குநர் விஜய், தற்போது கதைக்கான தலைப்புக்காக ரொம்பவே தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.