Home உலகம் ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை!

458
0
SHARE
Ad

russia mapவாஷிங்டன், மார்ச் 5 – ரஷ்யா ஒருவேளை உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீறினால் அந்நாடு எதிர்பார்க்காத கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், இத்தாலியப் பிரதமர் மேட்டியோ ரென்ஸி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்டு டஸ்க் ஆகியோர் காணொளி முறையில் நிகழ்த்திய சந்திப்பின் போது ரஷ்யாவிற்கு இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் நிகழ்த்திய காணொளி சந்திப்பின்போது, கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.”

#TamilSchoolmychoice

“பிப்ரவரி மாதம் 12-ம் தேதியிலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் மேற்கொள்ளப்பட்ட சமரச ஒப்பந்ததின்படி, உக்ரைன் பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண அனைத்து உதவிகளையும் செய்வதாக தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். அதன்படி ரஷ்யா நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது.