Home உலகம் எல்லை தாண்டும் மீனவர்களை சுடாமல் இருக்க முடியாது – ரணில் விக்கிரமசிங்கே!

எல்லை தாண்டும் மீனவர்களை சுடாமல் இருக்க முடியாது – ரணில் விக்கிரமசிங்கே!

461
0
SHARE
Ad

ranil_2334023fகொழும்பு, மார்ச் 9 – எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தமிழக மீனவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.

இந்தியாவுடனான உறவு, தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து ரணில் விக்கிரமசிங்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,

“இந்திய-இலங்கை உறவு, இலங்கை-சீனா உறவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்தியாவின் உதவி இல்லாமல் புலிகளை அழித்திருக்க முடியாது. நாங்கள் அதனை நன்கு புரிந்துள்ளோம்.”

#TamilSchoolmychoice

“ராஜபக்சே ஆட்சியில் நடந்ததுபோல் இந்தியா, சீனாவுடனான உறவில் விவேகமற்ற கொள்கைகளை நாங்கள் கடைபிடிக்க மாட்டோம். கட்சித் தீவை பொருத்தவரை அது இலங்கைக்கு உட்பட்ட பகுதி என இந்தியாவே ஒப்புக் கொள்ளும்”.

“இந்த விவகாரத்தை வைத்து தமிழக அரசியல் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் கச்சத்தீவை விட்டுத்தரப்போவதுமில்லை. இந்தியாவும் இதை எழுப்பாது.”

“மீனவர்கள் விவாகரம் குறித்து இரு நாட்டு மீனவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும். அதற்காக எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடாமல் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.