Home இந்தியா பெண்களுக்கு எதிரான வன்குற்றங்கள் நம்மை தலை குனிய வைக்கின்றது – மோடி வேதனை

பெண்களுக்கு எதிரான வன்குற்றங்கள் நம்மை தலை குனிய வைக்கின்றது – மோடி வேதனை

412
0
SHARE
Ad

modi_650_030815104737புதுடெல்லி, மார்ச் 9 – பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள் நம்மைத் தலை குனிய வைக்கின்றது என பிரதமர் மோடி தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- “பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களின் தைரிய செயல்கள், புகழ்மிக்க சாதனைகளை நினைத்து அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்”.

“நமது சமூகத்தின் வளர்ச்சியில் பெண்கள் சமபங்கு என்பதை மனதில் மீண்டும் ஒரு முறை நிலை நிறுத்தி செயல்படுவதில் உறுதியாக இருப்போம். மேலும் எனது தலைமையிலான அரசு பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு விஷயத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது”.

#TamilSchoolmychoice

“பெண்களுக்கு ஆதரவான சூழல் உருவாக வேண்டும் என்பதில் மத்திய அரசு முழு பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது . பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் போது நாம் வெட்கி தலை குனியும் நிலை ஏற்படுகிறது”.

“இந்த நாட்டில் இது போன்ற தவறுகள் நடக்காமல் வரும் சூழல் வரவேண்டும். இது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்காவண்ணம் அனைவரும் தோள் கொடுத்து நிற்க வேண்டும்”.

“பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டம் ஒரு முன்னுதாரண திட்டமாக திகழ்கிறது. பிரதமர் அலுவலகம் தரப்பில் மகளிர் காக்கும் அவர்கள் நலன் பெறவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது”.

“வன் செயல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்தல், சட்ட ஆலோசனை, மனநல ஆலோசனை ஆகியன ஒரே இடத்தில் வழங்கி தீர்வு காண மையங்களை அமைக்கப்படவுள்ளது”.

“இதற்கான சேவைகள் பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் அரசு 181 அவசர உதவி எண் அறிமுகம் செய்துள்ளோம். நமது கனவை , இலக்கை நனவாக்க அனைவரது ஆதரவும் வேண்டும்” என மோடி தெரிவித்துள்ளார்.