Home நாடு செம்பாக்கா இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது பாஸ்!

செம்பாக்கா இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது பாஸ்!

577
0
SHARE
Ad

pas 1கோத்தா பாரு, மார்ச் 9 – எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள செம்பாக்கா சட்டமன்ற தேர்தலில், அகமட் ஃபாதான் மாஹ்முட் என்பவரை தங்களது வேட்பாளராக அறிவித்துள்ளது பாஸ் கட்சி.

நேற்று பாஸ் உதவித்தலைவர் டத்தோ துவான் இப்ராகில் துவான் மன் கிளந்தான் இஸ்லாமிய தார்பியா மையத்தில் சுமார் 500 ஆதரவாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

42 வயதான ஃபாதான், மலேசிய இஸ்லாமிய நல இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் (பெர்க்கிம்) துணைத்தலைவர் மற்றும் விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். மலாயா பல்கலைக்கழகத்தில் சியாரியா பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

செம்பாக்கா இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

செம்பாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ நிக் அப்துல் அசிஸ் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.