Home நாடு “நீதிமன்ற முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் நடைபெறும்” – பழனிவேல்

“நீதிமன்ற முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் நடைபெறும்” – பழனிவேல்

560
0
SHARE
Ad

Palanivel-and-MICஈப்போ, மார்ச் 9 – ஆர்ஓஎஸ் உத்தரவுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற மறுஆய்வு முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மற்றும் துணைப்பிரதமருடன் கலந்து பேசிவிட்டதாகவும் நேற்று ஈப்போவில் நடைபெற்ற பேராக் மஇகா தொகுதி மற்றும் கிளைத்தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பழனிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பினாங்கு, மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் தனக்கு பெரிய அளவிலான ஆதரவு இருப்பதாகவும் பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனக்கு 2,292 தொகுதி மற்றும் கிளைத்தலைவர்களின் ஆதரவு உள்ளது” என்று பழனிவேல் உறுதியாகக் கூறியுள்ளார்.

அண்மையில், பழனிவேலுடன், கட்சியின் உதவித்தலைவர்கள் டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் ஆகியோர் மறுதேர்தல் குறித்த ஆர்ஓஎஸ் உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அதே வேளையில், மறுதேர்தலில் தலைமைத்துவ பதவிக்கு தான் கட்டாயம் போட்டியிடுவேன் என்றும் பழனிவேல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.