Home உலகம் சீனாவிலும் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவலா?

சீனாவிலும் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவலா?

443
0
SHARE
Ad

india_flag_mapபெய்ஜிங், மார்ச் 12 – ஈராக், சிரியா, லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஆசியாவின் மிகப் பெரும் வல்லரசு நாடான சீனாவிலும் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிபடுத்தி உள்ள சீனாவின் ஜின்ஜியாங் மாகாண அரசு, அவர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ளது.

இங்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத இயக்கத்தினர் வலுவாக செயல்பட்டு வருகின்றன. சீனாவில் அவ்வபோது நடக்கும் வன்முறைகளுக்கு இவர்கள் தான் காரணம். இவர்களை ஒடுக்குவதற்கு அம்மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அவர்கள் அவ்வபோது தலை தூக்கத் தான் செய்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த வட்டாரத்தின் அனைத்துலக எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சீன அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சீனாவிற்குள் கடந்த சில நாட்களாக முன்னர் சிலர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், போலியான கடவு அட்டைகள் வைத்து இருந்தவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீன அரசிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஜின்ஜியாங் மாகாண அரசு கூறுகையில், “கைது செய்யப்ப்பட்டவர்களிடம் முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது. அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும், மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளது.