Home உலகம் எனது தோல்விக்கு காரணம் இந்திய உளவுத் துறை – ராஜபக்சே குற்றச்சாட்டு!

எனது தோல்விக்கு காரணம் இந்திய உளவுத் துறை – ராஜபக்சே குற்றச்சாட்டு!

603
0
SHARE
Ad

rajapaksaகொழும்பு, மார்ச் 14 – இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைவதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய உளவுத் துறை தான் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் இராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8–ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் தனது தோல்விக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ (RAW) சதி செய்ததாக இராஜபக்சே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நான் சதியின் காரணமாக தோற்கடிக்கப்பட்டேன். அதற்கு இந்திய உளவுத்துறையின் தலைவர் பின்னணியில் இருந்துள்ளார். தேர்தல் நடைபெறும் நாளில் கடைசி நிமிடம் வரை அவர் எனது தோல்விக்காக பாடுபட்டார்.”

“இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் குற்றம் சுமத்தவில்லை. ஏனெனில், அவர் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் என்னை தோற்கடிக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மறைமுகமாக சதி வேலை நடைபெற்றுள்ளது..”

“நான் அதிபராக இருந்த போது இந்தியப் பிரதமர் மோடியை 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறேன். கடைசியாக 5 இந்திய மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பிறகு சார்க் மாநாட்டில் சந்தித்து பேசினேன். ”

தற்போது அவர் எனது நாட்டிற்கு வந்துள்ளார். எனவே அவரை நான் நிச்சயம் சந்திப்பேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இராஜபக்சேவின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.