Home இந்தியா லண்டனில் காந்தி சிலையை திறந்து வைக்கிறார் அருண்ஜெட்லி!

லண்டனில் காந்தி சிலையை திறந்து வைக்கிறார் அருண்ஜெட்லி!

499
0
SHARE
Ad

featuredarunjaitley1லண்டன், மார்ச் 14 – இரண்டு நாள் பயணமாக நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் சென்றுள்ள இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போனுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை ஜேட்லி இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், லண்டன் பங்குச் சந்தையில் முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, “யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா’வின் புதிய வங்கிக் கிளையையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். “இந்தியாவில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இடையே ஜேட்லி உரையாற்றுகிறார்.

#TamilSchoolmychoice

பின்னர், சென்ட்ரல் லண்டன் பகுதியில் உள்ள தாஜ் ஹோட்டலில், வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய 100 ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை இன்று சனிக்கிழமை (மார்ச் 14) அருண் ஜேட்லி திறந்து வைக்க உள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவில் இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார்.