Home கலை உலகம் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஏ.ஆர். ரகுமான்!

வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஏ.ஆர். ரகுமான்!

795
0
SHARE
Ad

a-r-rahmanசென்னை, மார்ச் 14 – தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது இசை மூலம் அனைத்து மொழி மக்களையும் கவர்ந்து வருபவர் ஏ.ஆர். ரகுமான். இவர் சமீபத்தில் அமெரிக்க செல்பேசி நிறுவனம் ஒன்றிற்கு இசையமைத்து தந்திருக்கிறார்.

அதற்கான சம்பளம் ஏ.ஆர்.ரஹ்மானின் அறக்கட்டளைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பண வர்த்தனையில் ஈடுபட்டதற்காக ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டிருக்கிறது.

இதுபற்றி ரகுமானின் தணிக்கையாளர் கூறுகையில், “குறிப்பிட்ட வெளிநாட்டு பண பரிவர்த்தனை நடந்திருந்தாலும் அப்பணம் முழுவதுமாக தேசிய வங்கியில்தான் செலுத்தப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice