கொழும்பு, மார்ச் 14 – தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஒரு பகுதியாக இலங்கை சென்று சேர்ந்திருக்கும் இந்தியப் பிரதமரின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் புதிய அதிபரும், பிரதமரும் பதவியேற்றிருக்கும் தருணத்தில் இந்தியப் பிரதமரின் வருகை இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்தும் என்பதோடு, இதனால், இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாளைய பிரச்சனையும் ஒரு தீர்வை நோக்கி நகரக் கூடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் அதிபர் மாளிகையில் நரேந்திர மோடி அதிபர் மைத்திரபால சிறிசேனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
நேற்று இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்தடைந்த மோடி, தனது இரண்டு நாள் வருகையின்போது, வெளியுறவுக் கொள்கை, வணிகம், அரசியல் நட்புறவு போன்ற அம்சங்களைக் குறி வைத்து பேச்சுக்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு வந்தடைந்த அவரையும் அவரது குழுவினரையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார்.
இலங்கை அதிபர் மாளிகையில் நரேந்திர மோடிக்கு இராணுவ மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பு வழங்கப்படுகின்றது.
படங்கள்: EPA